தமிழ் பழமொழிகள்

  • அகத்தினழகு முகத்தில் தெரியும்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
  • அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
  • அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
  • ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
  • ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
  • ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  • இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
  • உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
  • எறும்பூரக் கல்லும் தேயும்.
  • ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
  • கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
  • கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  • கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
  • கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
  • கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பத