இன்று நாம் காணும் இந்த வித்தியாலயம் 1890ம்ஆண்டளவில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வலதுபக்கத்தின் வாழ்ந்த கத்தோலிக்க சிறார்களுக்கு கல்வியைப்போதிக்கும் பொருட்டு முதன்முதலில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது சிறியதொரு ஓலைக்குடிலாகவே அமைந்து இருந்தது அக்காலத்தில் பங்குத்தந்தையாக பதவியேற்ற ஐரோப்பிய அருட் திரு ஜண்டல் அவர்களின் முயற்சியால்; இப்பாடசாhலை திருத்தியமைக்கப்பட்டது. 1932ம் ஆண்டில் 40 பிள்ளைகளுடன் தொடங்கிய இப்பாடசாலை 1935ம் ஆண்டு தை மாதம் 83 பிள்ளைகளுடன் விளங்கியது. இக்கால வேளையில் நல்ல நிலையுடன் அமைந்திருந்த பாடசாலையுடன் இது போட்டியிட வேண்டிய நிலை அமைந்திருந்தது.அரசாங்க இரு மொழி பாடசாலை கிருஸ்தவ சமய பாடசாலை, இந்து சமய பாடசாலையுடன் நன்கு வளர்ச்சியுற்றிருந்தன. இவ்வாறான பாடசாலையுடன் போட்டியிட வேண்டியிருந்தமையும் கத்தோலிக்க மதத்தை வளர்ச்சியடையச்செய்ய வேண்டியுள்ளமையும் கத்தோலிக்க மத சார்பான பாடசாலை ஒன்றை நிலைப்படுத்தவேண்டிய அவசியத்தை உண்டாக்கியது.
1936ம் ஆண்டு எமது பங்குத்தந்தையாக கடமையேற்ற அருட்திரு வேந்த கோன் அடிகளாரவர்கள் மேற்கூறிய படி ஒரு தரமான கத்தோலிக்க பாடசாலையின் அவசியத்தை உணர்ந்து தமது அயராத உழைப்பினால் மகா வந்தனைக்குரிய மேற்றிராணி ஆண்டகையின் பணஉதவியினூடாக 1937ம் ஆண்டு தற்போது எமது பாடசாலையில் இருக்கும் இடத்தை தெரிந்து 50 அடி நீளமும் 20 அடி அகலமும் உள்ள மண்டபம் இதனுடன் இணைந்த 25 அடி நீளமும் 20அடி அகலமும் கொண்ட மேடை அமைத்து உதவினார்.
1938ம் ஆண்டு தை மாதம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட &